bbc.co.uk navigation

சிரியாவுக்கான சமாதான தூதுவர் பணியில் இருந்து அன்னான் விலகுகிறார்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 2 ஆகஸ்ட், 2012 - 15:19 ஜிஎம்டி

அரபு லீக் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பிலான மத்தியஸ்தர் பதவியில் இருந்து சிரியாவுக்கான சர்வதேச சமாதானத் தூதுவர் கோஃபி அன்னான் விலகுவதாக செய்திகள் கூறுகின்றன.

தனது பதவியை மேலும் நீடிப்பதில்லை என்று அன்னான் அவர்கள் முடிவு செய்துள்ளதாக ஐநா தலைமைச் செயலர் பான் கி மூன் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

சிரியா நெருக்கடி தொடர்பில் அன்னான் ஆற்றிய பணிகளுக்கு தான் மிகுந்த நன்றியை கூறுவதாக பான் கீ மூன் கூறியுள்ளார்.

சிரியா மோதல் வலுக்கிறது


இதற்கிடையே, சிரியாவின் பெரிய நகரான அலெப்போவில் இருந்து கிளர்ச்சிக்காரர்களை வெளியேற்றுவதற்கு இராணுவம் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், அந்த நகரின் உள்ளேயும், வெளியேயும் சண்டை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கிளர்ச்சிக்காரர்களின் நிலைகள் மீது துப்பாக்கி பொருத்திய ஹெலிக்கொப்டர்கள் மூலம் தாக்குதல் நடத்துவதற்காக பயன்படுத்தப்பட்டுவந்த விமானப் படைத்தளத்தின் மீது, தாம் கைப்பற்றிய சிரிய இராணுவத்தின் தாங்கி மூலம் கிளர்ச்சிக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதேவேளை டமாஸ்கஸில் 70 கும் அதிகமான ஆட்களை ஒட்டுமொத்தப் படுகொலை செய்ததாக அரசாங்கப் படையினர் மீதும், ஆயுதக்குழுக்கள் மீதும் எதிர்க்கட்சி செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தலைநகரிலும் சண்டை தொடருகிறது.

முன்னதாக அலெப்போவில் சிறைக் கைதிகளைக் கொன்றதாக கிளர்ச்சிக்கார ஆயுதக்குழுவினர் மீது எதிர்த்தரப்பைச் சேர்ந்த சிரியாவின் தேசியக் கவுன்சில் குற்றஞ்சாட்டியிருந்தது.

BBC © 2013 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.