
திருநங்கைகளின் கோரிக்கையை ஏற்று, இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கான தனது கடுமையான உடை விதிகளை மாற்றியுள்ளது.
ஆண்கள் கறுப்பு சூட், பெண்கள் கறுப்பு பாவாடை அல்லது கறுப்பு காற்சட்டை அணிய வேண்டும் என்று தற்போதுள்ள விதி அடுத்த வாரம் முதல் மாறுகிறது.
பரீட்சை எழுதவரும் போதும், பல்கலைக்கழக வைபவங்களில் கலந்துகொள்ளும் போதும், மாணவ மாணவியர் இப்படியான சட்ட திட்ட ஆடைகளை இனி அணிய வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேல், ஆண் மாணவர்கள் பாவாடைகள் அணியலாம், தொடை வரையிலான கால் உறைகள் அணியலாம், அத்துடன் மாணவியர் கறுப்பு சூட் அணியலாம்.








