
இறங்குமுகத்தில் ஃபேஸ் புக்கின் பங்கு மதிப்பு
சமூக வலைத்தளமான ஃபேஸ் புக்கின் பங்கு மதிப்புகள் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளன.
பெருமளவில் விளம்பரப்படுத்தப்பட்டு இரண்டு மாதங்களுக்கு முன்னர் அதன் பங்குகள் சந்தையில் விற்கப்பட்ட நிலையில், இந்த வீழ்ச்சி தற்போது ஏற்பட்டுள்ளது.
இன்றைய பங்கு வர்த்தகம் தொடங்கிய போது அதன் மதிப்பு சுமார் பதினைந்து சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியடைந்து.
ஃபேஸ் புக் வெளியிட்ட நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக இருந்தாலேயே பங்குச் சந்தையில் அதன் மதிப்பு வீழ்ச்சியடைந்தது.

அமெரிக்கப் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படுகிறது
நேற்று வியாழக்கிழமைதான் அந்நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் எட்டு சதவீதம் வீச்சியை கண்டது.
ஒரு பில்லியன் டாலர்களை திரட்டும் வகையில் பங்கு சந்தைக்குள் நுழைந்த பிறகு ஃபேஸ் புக் வெளியிட்டுள்ள தனது நிதிநிலை அறிக்கையில், 160 மில்லியன் டாலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அந்நிறுவனத்தின் வளர்ச்சி குறைந்துள்ளது என்று வந்துள்ள செய்திகளை அடுத்து, அதில் முதலீடு செய்தவர்கள் குறிப்பாக கவலையடைந்துள்ளனர் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.








