
லண்டன் ஒலிம்பிக்ஸில் பெண்கள் உதைபந்தாட்டப் போட்டியின் போது வடகொரிய அணிக்காக தென்கொரிய கொடியை தவறுதலாகக் காண்பித்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்காக லண்டன் 2012 ஒலிம்பிக்ஸ் ஏற்பாட்டாளர்கள் வடகொரியாவிடம் மன்னிப்புக் கோரியுள்ளனர்.
கிளாஸ்கோவில் நடந்த இந்தப் போட்டியில், இந்த சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வடகொரிய அணியினர் வெளிநடப்புச் செய்ததால், ஆட்டம் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக தாமதமானது.
இது ஒரு சிறிய மனிதத் தவறு என்றும் அது மீண்டும் நடக்காது என்றும் லண்டன் போட்டிகளின் ஏற்பாட்டாளர்களின் தலைமை நிறைவேற்று அதிகாரி கூறியுள்ளார்.
வடகொரிய அதிகாரிகள் கருத்து எதுவும் கூறவில்லை.







