ஃபேஸ்புக் பங்கு விலை $38, "நிறுவன மதிப்பு $10,400 கோடிகள்"

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 18 மே, 2012 - 10:29 ஜிஎம்டி
ஃபேஸ்புக்கின் லட்சியங்களை விளக்குகிறார் அதன் தோற்றுநர் மார்க் சுக்கர்பர்க்

ஃபேஸ்புக்கின் லட்சியங்களை விளக்குகிறார் இணையத்தி விளக்குகிறார் அதன் தோற்றுநர் மார்க் சுக்கர்பர்க்

ஃபேஸ்புக் சமூக வலைத்தள நிறுவனம் முதல் தடவையாக பங்குச் சந்தை வர்த்தகத்துக்கு வரவுள்ள நிலையில், அதன் பங்கு ஒன்றுக்கு $38 என விலை நிர்ணயித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த பங்கு விலையை வைத்துப் பார்க்கையில் இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு 10,400 கோடி டாலர்களைத் தொடும் என்று கணிக்கப்படுகிறது.

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த இணைய சேவை நிறுவனத்தின் பங்குகளை வாங்க மக்களிடையே ஆர்வம் மிகவும் அதிகமாக உள்ளது.

மொத்தத்தில் தமது நிறுவனம் 42 கோடியே 10 லட்சம் பங்குகளை விற்பனைக்கு விடலாம் என இந்நிறுவனம் முன்னதாக கோடி காட்டியிருந்தது.

ஆனால் இந்த எண்ணிக்கையில் 25 சதவீதம் குறைவான எண்ணிக்கையிலான பங்குகளே விற்பனைக்கு விடப்படும் என பின்னர் அது தெரிவித்திருந்தது.

அமெரிக்க பங்கு வர்த்தக சரித்திரத்தில் ஒரு நிறுவனத்தின் பங்குக்கு கிடைத்த மிக அதிக விலைகளில் ஒன்றாக ஃபேஸ்புக் பங்கு நிறுவனத்துக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை அமைந்துள்ளது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.