
நைஜீரியாவின் வடக்கில் முக்கிய நகரான கானோவில் பல்கலைக்கழகம் ஒன்றை துப்பாக்கிதாரிகள் தாக்கியதில் குறைந்தபட்சம் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்திருக்கிறார்கள்.
பெயெரொ பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள ஒரு தேவாலயத்தை தாக்கியவர்கள் அதன் மீது வெடிகுண்டுகளை வீசியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தார்கள்.
அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்கள் தப்பியோடிய வேளையில் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிதாரிகள் மோட்டார் சைக்கிள்களில் தப்பியோடியதாக பொலிஸ் தரப்பு பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரியில் கானோ மாநிலத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகளான, போகோ ஹரம் குழுவினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தபட்சம் 185 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.








