
சிரியாவில் தொடரும் வன்செயல்கள்
துனிஸில் நடக்கும் மாநாடு ஒன்றில் கலந்துகொள்ளும் மேற்கத்தைய மற்றும் அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சிரியாவில் உடனடியாக மோதல் நிறுத்தம் அமலுக்கு வரவேண்டும் என்று கோருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிரியாவின் நண்பர்கள் என்ற தொனிப்பொருளில் நடக்கும் இந்த மாநாடு, ஹொம்ஸ் உட்பட மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக மனத நேய உதவிகள் செல்ல அனுமதிக்குமாறு கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிரியா மோதலில் கொல்லப்பட்ட செய்தியாளர்களான மரியா கொல்வின் மற்றும் றெமி ஒச்லிக் ஆகியோரின் சடலங்களை இன்னமும் ஹொம்ஸ் நகரில் இருந்து வெளியே எடுத்து வரமுடியவில்லை.
அத்துடன் இந்த மோதலில் காயமடைந்த மேலும் இரு செய்தியாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து வெளியே வரமுடியாமல் இருக்கிறார்கள்.
சிரியாவின் முக்கிய கூட்டாளிகளான ரஷ்யாவும், சீனாவும் துனிஸ் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.








