bbc.co.uk navigation

ஆப்ரிக்க நில 'அபகரிப்பு'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 24 பிப்ரவரி, 2012 - 12:47 ஜிஎம்டி

ஆப்ரிக்காவில் நில 'அபகரிப்பு'

  • கயசே சாம்பிள்
    கடந்த சில ஆண்டுகளில் ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியாவில் நடக்கும் பாரிய அளவிலான நில கையகப்படுத்தல்கள் பத்திரிகை செய்திகளை ஆக்கிரமித்திருந்தன. ஆப்ரிக்காவில் எத்தியோப்பிய, தெற்கு சுடான், காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் சியாரா லியோன் போன்ற நாடுகள் எல்லாம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் பல முக்கிய காணி உடன்படிக்கைகளை செய்துள்ளன.ஆனால் அவை பெருமளவில் மக்களுக்கு பல பாதகங்களை ஏற்படுத்தியுள்ளன.
  • தொழிற்சாலை ஒன்று
    இப்படியான நிறுவனங்களிடம் நிலம் போவதால் உட்கட்டமைப்பு விருத்தி செய்யப்படுவதுடன் வேலை வாய்ப்பு அதிகரிப்பதாக அரசாங்கங்கள் கூறுகின்றன.
  • வெள்ளரிக்காய் அறுவடை
    பெருமளவில் அங்கு விவசாயம் நடப்பதுடன், வெளிநாடுகளுக்கும் பல விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவை கூறுகின்றன.
  • ஒரு வரம்பின் மீது விவசாய கூலிகள் செல்கிறார்கள்
    ஆனால் இந்த விடயங்களால் வெளிநாடுகளே அதிக பலனைப் பெறுவதாகவும் உள்ளூர் மக்கள் வெறுமனே சுரண்டப்படுவதாகவும் செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.
  • காடுகள் எரிகின்றன
    அத்துடன் காணிகளை விவசாயத்துக்கு உகந்த வகையில் மாற்றுவதற்காக பல காடுகள் அழிக்கப்படுவதாகவும், எரிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
  • காணிகள் விவசாயத்துக்காக திருத்தப்படுகின்றன
    ஆப்பிரிக்காவின் முக்கிய விலங்குகள் சரணாலயம் ஒன்றுக்கு அருகே உள்ள காடுகள் அழிக்கப்படுவதால், அங்கு விலங்குகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
  • ஆட்களை ஏற்றிச் செல்லுகிறார்கள்
    பல மக்கள் இந்த காணி அபகரிப்புக்காக தமது இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது எத்தியோப்பியாவில்...
  • நீர்ப்பாசனத்துக்காக ஒரு வாய்க்கால் உருவாக்கப்படுகிறது
    ஆனால், எவராலும் பயன்படுத்தப்படாத காணிகளையே தாம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுமதிப்பதாக, அதுவும் 25 வருட குத்தகைக்கு வழங்குவதாக அரசாங்கங்கள் கூறுகின்றன.
  • மாடு மேய்ப்பவர்கள்
    தாம் பயன்படுத்தும் நிலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கொடுக்கப்பட்டதால், தாம் நீண்ட தூரம் கடந்தே நீர் எடுக்க செல்ல வேண்டியுள்ளதாக இவர்கள் கூறுகிறார்கள்.
  • கரும்பு நடுகை
    இது சீனி உற்பத்திக்காக கரும்பு நடுவதற்காக ஒதுக்கப்பட்ட ஒரு இடம்.
  • கிராம மக்கள்
    அஃபார் இன மக்களின் இந்த இடம் தற்போது அவர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. அவர்கள் அங்கிருந்து வெளியேற முன்பாக ஆயுத போராட்டத்துக்கும் தயாராக இருந்தார்கள். இப்போது அவர்களுக்கு பல நிறுவனங்களால் உணவு உதவி வழங்கப்படுகிறது.
  • அடிடி அபாபாவில் ஒரு மரக்கறி வியாபாரி
    விவசாய தொழில் மயமாக்கல் காரணமாக தமது வழமையான தொழில்கள் பாதிக்கப்பட்டதாக உள்ளூர் மரக்கறி வியாபாரிகளும் கூறுகிறார்கள்.

More Multimedia

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.