bbc.co.uk navigation

இராக் தாக்குதல்களில் 50 பேர் பலி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 பிப்ரவரி, 2012 - 13:23 ஜிஎம்டி
குண்டு வெடித்த இடம் ஒன்று

குண்டு வெடித்த இடம் ஒன்று

இராக்கில் அலையலையாகத் தொடர்ந்த தாக்குதல்களில் 50 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 100 பேர் வரை காயமடைந்துள்ளார்கள்.

குண்டுத் தாக்குதல்களும், துப்பாக்கிச் சூடுகளும் பல இடங்களில் நடந்துள்ளன.

இந்த வன்செயல்களில் முக்கிய சியாக்கள் வாழும் பகுதிகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பொலிஸாரும், சோதனைச் சாவடிகளும் தாக்கப்பட்டுள்ளன.

பாக்தாதில் மத்திய கர்ரடா மாவட்டத்தில், அடுத்தடுத்து இடம்பெற்ற இரு குண்டுவெடிப்புக்களில் 9 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

தலைநகருக்கு வெளியே பகுபாவில் இருவர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்த தாக்குதல்களுக்கு எந்தக் குழுவும் உரிமை கோரவில்லை. கடந்த டிசம்பரில் அமெரிக்கப் படையினர் வெளியேறியது முதல் இராக்கில் வன்செயல்கள் அதிகரித்து வருகின்றன.

மொசூல், கிர்க்குக், சலாஹுதீன் ஆகிய இடங்களிலும் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன.

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.