bbc.co.uk navigation

குரான் எரிப்பு தொடர்பாகப் போராட்டம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 பிப்ரவரி, 2012 - 16:24 ஜிஎம்டி
பாக்ராம் நகரில் நடைபெற்ற போராட்டம்

பாக்ராம் நகரில் நடைபெற்ற போராட்டம்

முஸ்லிம்களின் புனித நூலான குரானின் பிரதிகள் ஆப்கானிஸ்தானில் எரிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அங்குள்ள அமெரிக்க கமாண்டர் ஒருவர் மன்னிப்புக் கோரியுள்ளார்.

இஸ்லாமிய மதப் பொருட்களை அப்புறப்படுத்துவதற்கு முறையற்ற வழி கடைபிடிக்கப்பட்டது என்ற அடிப்படையில் இந்த விவகாரத்தில் விசாரணை நடைபெறுவதாக ஜெனரல் ஜோன் அல்லென் கூறினார்.

இந்தப் பொருட்களை தாலிபன் கைதிகள் தமக்கிடையே தகவல்களை கைமாற்றிக்கொள்ளப் பயன்படுத்தியதால் அவர்களிடமிருந்து அமெரிக்கப் படையினர் அவற்றைப் பறிமுதல் செய்ததாக மூத்த ஆப்கன் அதிகாரிகள் இருவர் பிபிசியிடம் கூறினர்.

இந்த விடயம் காரணமாக காபூலின் வடக்கேயுள்ள பாக்ராம் விமானப்படைத் தளத்துக்கு வெளியே பெரும் போராட்டமொன்று நடந்தது.

இந்தப் போராட்டத்தில் கூடியிருந்தவர்களைக் கலைக்கும் நோக்கில் சர்வதேசப் படையினர் ரப்பர் குண்டுகளை சுட்டதில் ஒருவர் காயமடைந்தார். போராட்டத்தில் கலந்து கொண்ட ஐந்துபேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.