
டில்லியில் குண்டு வெடிப்புக்குள்ளான கார்
இந்தியாவிலும், ஜோர்ஜியாவிலும், இஸ்ரேலிய தூதரக வாகனங்களை இலக்கு வைத்து கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் இரு குண்டுத் தாக்குதல் முயற்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
டில்லியின் உயர் பாதுகாப்பு வலயத்தில் இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பு ஒன்றில் இஸ்ரேலிய இராஜதந்திரி ஒருவரது மனைவியும், ஓட்டுனரும் காயமடைந்துள்ளனர்.
இந்தக் காரில் ஏதோ ஒரு பொருளை பொருத்திய மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை தாம் தேடிவருவதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜோர்ஜிய தலைநகர் திபிலிஸியில் இஸ்ரேலிய இராஜதந்திரியின் கார் ஒன்றில் வெடி பொருள் ஒன்று பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அது வெடிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு எவரும் உரிமை கோரவில்லை.
ஆனால், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவர்கள் இரான் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.








