bbc.co.uk navigation

'அமெரிக்க ட்ரோன் தாக்குதல்களில் பெருமளவு பொதுமக்கள் கொலை'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 5 பிப்ரவரி, 2012 - 17:31 ஜிஎம்டி
அமெரிக்காவின் ஆளில்லா விமானமொன்று

அமெரிக்காவின் ஆளில்லா விமானமொன்று

பாகிஸ்தானில் பழங்குடியின மக்களின் பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அமெரிக்காவின் ட்ரோன் ஆளில்லா விமானத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக லண்டனிலிருந்து இயங்கும் புலனாய்வு செய்திப் பணியகத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.

பழங்குடிமக்களின் உள்ளூர்க் கவுன்சில் கூட்டங்களில் கலந்துகொண்டிருந்தவர்கள் கூட கொல்லப்பட்டுள்ளதாக இந்த செய்தி கூறுகிறது.

தாக்குதல்களின் பின்னர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுகொண்டிருந்தவர்கள் மீதும் இரண்டாவது கட்டமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

லண்டன் புலனாய்வுச் செய்திப் பணியகம் குறிப்பான சம்பவங்களை சுட்டிக்காட்டி, அவற்றை நேரில் பார்த்தவர்களின் வாக்குமூலங்களுடன் இந்த புலனாய்வை நடத்தியிருக்கிறது.

இதேவேளை, அமெரிக்காவின் வான் தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுவதை அதிபர் ஒபாமா அண்மையில் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.