bbc.co.uk navigation

கடுங்குளிரில் நடுங்கும் ஐரோப்பா

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 3 பிப்ரவரி, 2012 - 16:06 ஜிஎம்டி
  • ஜெர்மனியின் பவேரியா பிரதேசத்தில் உள்ள மலைப் பகுதியில் ஊரே உறைந்துபோய் கிடக்கிறது. உறைந்து போன ஒரு மரத்தின் ஊடாக ஒரு வீடு.
  • பவேரியப் பிரதேசத்து தேவாலயம் ஒன்று பனி ஆடை போர்த்திக்கொண்டு நிற்கிறது.
  • போலந்து தலைநகர் வார்சாவில் வீடில்லாத ஏழை மக்களுக்கு சூடான சமைத்த உணவு வழங்கப்படுகிறது. யுக்ரைனிலும் போலந்திலும்தான் இந்தக் குளிரில் மிக அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
  • ரொமேனியத் தலைநகர் புக்கரெஸ்ட் நகரில் அடுப்பெரிக்க ஒடிந்த மரக்கிளை ஒன்றை எடுத்துக்கொண்டு போகும் பெண் ஒருவர்.
  • போஸ்னியாவில் கடுங்குளிரால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு உணவு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
  • லித்துவேனியாவின் தலைநகர் வில்நியஸில் -30 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு மோசமான குளிர் தாக்கியது.
  • மோசமான பொருளாதார சூழலும் நிதி நெருக்கடியும் நிலவுகிற கிரேக்கத்தில் குளிரைச் சமாளிக்க முடியாமல் மக்கள் திணறுகின்றனர்.
  • துருக்கியத் தலைநகர் அங்காராவிலும் கடும் குளிர், அங்கு மலையோரத்தில் ஏற்பட்ட பனிச் சரிவில் சிக்கி பெண்ணொருவர் மாண்டார்.
  • ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிலும் கடுமையான குளிரும் பனிப்பொழிவும் இருந்தது. சைபீரியாவில் -40 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு கடுங்குளிர் ஏற்பட்டது.
  • ஜப்பானிலும் பல இடங்களில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. அங்கு ஓரிடத்தில் பனிச் சரிவில் சிக்கி மூவர் மூர்ச்சையாகிப்போன சம்பவம் பற்றி அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

More Multimedia

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.