-
ஐவரிகோஸ்டில் பதவியகற்றப்பட்டிருந்த அதிபர் லாரண் பாக்போ மீது போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டு அவர் தி ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது, தலைநகர் அபிஜானில் அதிர்ச்சி அலைகளை பரவச் செய்தது. சென்ற வருடம் நடந்த அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்திருந்த பாக்போ ஒரு ஆயுதப் போராட்டத்தால் அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.
-
நோர்வேயின் உட்டோயா குட்டித் தீவில் மனம் பேதலித்த அண்டர்ஸ் பிரெய்விக் என்ற துப்பாக்கிதாரி தன்னந்தனியாக 69 பேரை சுட்டுக் கொண்டிருந்தார். ஒரு குண்டுவெடிப்பை நடத்தி மேலும் 8 பேரை இவர் கொன்றிருந்தார். இந்தச் சம்பவம் அந்நாட்டையே திகிலிலும் சோகத்திலும் உறையச் செய்திருந்தது. இந்தப் படத்தில் உடோயா தீவில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்தப்படுகிறது









































