BBC navigation

டெக்ஸாஸில் காட்டுத் தீ

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 6 செப்டம்பர், 2011 - 16:19 ஜிஎம்டி
  • அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் பல இடங்களில் காட்டுத் தீ பரவியுள்ளது. லீ என்ற வெப்பமண்டலப் புயலின் காரணமாக வீசுகின்ற காற்றில் தீ பரவிவருகிறது.
  • மாகாணத் தலைநகர் ஆஸ்டினுக்கு தென்கிழக்கே உள்ள பாஸ்ட்ரோப் என்ற மாவட்டத்தில் 26 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு பரவியுள்ள தீயை அணைக்க தீயணைப்பு படையினர் போராடிவருகின்றனர்.
  • பாஸ்ட்ரொப் தீயின் காரணமாக ஐயாயிரம் பேர் வரையிலானோர் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
  • கடந்த சனிக்கிழமை ஆரம்பித்த காட்டுத் தீ மாகாணம் எங்கும் அறுபதுக்கும் மேற்பட்ட இடங்களில் பரவியுள்ளது.
  • அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இந்த மாகாண ஆளுநர் ரிக் பெர்ரி அதனை பாதியில் விட்டு வந்து தீயணைப்பு பணி ஒருங்கிணைப்பில் ஈடுபட்டுள்ளார்.
  • 1950க்குப் பின்னர் டெக்ஸாஸ் மாகாணம் இவ்வருடம் மிக மோசமான வறட்சியையும் வெப்பத்தையும் சந்தித்துள்ளது.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.