நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (5.8 எம்பி)

ரிச்சர்ட் அட்டன்பரோ : படைப்பு, பங்களிப்பு மற்றும் பார்வை

25 ஆகஸ்ட் 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 16:36 ஜிஎம்டி

காந்திப் படத்தை இயக்கியது உட்பட, ஆங்கிலத் திரையுலகில் பல ஆண்டுகள் ஆளுமை செலுத்திய பிரிட்டிஷ் நடிகர் மற்றும் இயக்குநர் சர் ரிச்சர்ட் அட்டன்பரோ, தமது 90 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக அவரது மகன் அறிவித்துள்ளார்.

பிரிட்டனின் ஒரு முன்னணி நடிகரான இருந்த அவர் பின்னர் வெற்றிகரமான ஒரு இயக்குநராகவும் திகழ்ந்தார்.

ஒரு இயக்குநர் எனும் முறையில், காந்தி திரைப்படத்துக்காகவே அவர் மிகவும் அறியப்பட்டவராக இருந்தார். காந்தி அவர் இரண்டாவதாக இயக்கிய படம்.

1947 ஆம் ஆண்டு ‘பிரைட்டன் ராக்’எனும் படத்தில், மனநிலை பாதிக்கப்பட்டு வன்முறையுடன் உலா வரும் இளைஞராக அவர் நடித்தார். அந்தப் படத்தின் வெற்றி அவரை ஒரு திறமையான நடிகராக அடையாளம் காட்டியது.

மறைந்த ரிச்சர்ட் அட்டனபரோ அவர்களின் தரையுலக ஆளுமை மற்றும் பங்களிப்பு குறித்து, திரைப்படங்கள் குறித்து தொடர்ந்து எழுதிவருபவரும், திரை இலக்கியத்துக்காக இந்திய அரசின் மிக உயரிய விருதைப் பெற்றவருமான தியோடர் பாஸ்கரன் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய பேட்டியை இங்கே கேட்கலாம்.