BBC navigation

படங்களில்: 2014 ஆஸ்கர் விருதுகள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 3 மார்ச், 2014 - 10:44 ஜிஎம்டி
  • சிறந்த திரைப்படத்துக்கான இவ்வாண்டின் ஆஸ்கர் விருது 12 இயர் ய ஸ்லேவ் என்ற சரித்திர திரைப்படத்துக்கு சென்றுள்ளது.
  • ஆனால் இந்த முறை அதிக பிரிவுகளில் ஆஸ்கர் வென்றது க்ராவிட்டி என்ற திரைப்படம். மொத்தம் ஏழு பிரிவுகளில் ஆஸ்கர் வென்றது இப்படம். இப்படத்தின் இயக்குநரான தென்னமெரிக்காவைச் சேர்ந்த அல்ஃபோன்ஸோ கியுஅரோன் சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றார்.
  • கதாநாயகி வேடத்தில் சிறந்த நடிகைக்கான விருத்தை புளூ ஜாஸ்மின் படத்தில் நடித்தமைக்காக கேட் பிளான்ச்செட் வென்றுள்ளார்.
  • கதாநாயகன் பாத்திரத்தில் சிறந்த நடிகருக்கான விருதை டல்லாஸ் பையர்ஸ் கிளப் என்ற படத்தில் எய்ட்ஸ் நோயாளியாக நடித்தமைக்காக மேத்யூ மெக்கொன்னொயி பெற்றார்.
  • துணை கதாபாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான விருது கென்யாவைச் சேர்ந்த புதிய வரவான லுபிடா நியங்கோவுக்கு சென்றுள்ளது. 12 இயர் எ ஸ்லேவ் படத்தில் பேட்ஸி என்ற பாலியல் தொழிலாளி பாத்திரத்தில் தோன்றியமைக்காக இவருக்கு இவ்விருது கிடைத்தது.
  • சிறந்த துணை நடிகருக்கான விருது டல்லாஸ் பயர்ஸ் கிளப் படத்தில் திருநங்கையாக தோன்றிய ஜாரெட் லெட்டோவுக்கு கிடைத்துள்ளது.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.