பிறந்தது குதிரை ஆண்டு : மகிழ்ந்தனர் சீன மக்கள்

3 பிப்ரவரி 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 17:25 ஜிஎம்டி

சீனப் புத்தாண்டை உலகின் பல பகுதிகளிலும் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த வருடம் குதிரை ஆண்டு என்று அழைக்கப்படுகிறது.
சீனப் புத்தாண்டையொட்டி, தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற வசந்தகால திருவிழாவொன்றில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்குபெற்றனர். அந்தத் திருவிழாவில் நாட்டுப்புற கலைஞர் ஒருவரின் கண்ணைக் கவரும் ஆட்டம்.
இந்தத் திருவிழாவில் வாயிலிருந்து நெருப்பைக்கக்கும் வகையிலான வித்தைகளை செய்து காண்பித்த ஒரு கலைஞர். நடைபெற்ற இடம் பீஜிங்கிலுள்ள டிட்டன் பூங்கா.
ஆசியாவிலேயே மிக அதிகமானவர்கள் குடும்பத்துடன் விடுமுறையைக் கொண்டாடும் சீனப் புத்தாண்டின் போது, பீஜிங் நகரின் உயரே ஜொலித்த வாண வேடிக்கையின் ஒரு பகுதி.
குதிரை ஆண்டை வரவேற்க ஷாங்ஹாயிலும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. பாரம்பரியமாக சீனாவில் புத்தாண்டு என்பது விதைக்கும் பருவத்தின் தொடக்கத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது.
பலவிதமான வித்தைகள் காட்டப்பட்ட இந்தத் திருவிழாவில் ஒருவர் வாயிலிருந்து வண்ணமயமான ரிப்பன்களை எடுத்து பார்ப்பவர்களை பரவசப்படுத்தினார்.
பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள சீனர்களும் சீனப் புத்தாண்டை, தலைநகர் மணிலாவுக்கு வெளியேயுள்ள 'சைனா டவுண்' பகுதியில் கொண்டாடினர். அப்போது இடம்பெற்ற டிராகன் நடனம். இந்த நடனம் மக்களுக்கு வளத்தைக் கொண்டுவரும் என்று பாரம்பரியமாக நம்பப்படுகிறது.
சிங்கப்பூரிலும் சீனப் புத்தாண்டு கோலாகலமாக் கொண்டாப்பட்டது. அங்குள்ள தென்கிழக்காசிய மீன்காட்சியகத்தில் பார்வையாளர்கள் பெருமளவில் கூடியிருந்தனர்.
கம்போடியாவிலும் தமது புத்தாண்டை சீனர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். தலைநகர் நாம் பென்னில் குதிரை ஆண்டு டிராகன் நடனத்துடன் வரவேற்கப்பட்டது.
இந்தோனேஷியாவில், கடும்போக்கு ஆட்சியாளராக இருந்த சுகார்த்தோவின் காலத்தில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது ஜகார்த்தாவிலுள்ள பூர்வகுடி சீனர்கள் தமது புத்தாண்டை கொண்டாடி மகிழ்கிறார்கள்.
மலேசியாவில் தமது புத்தாண்டை கொண்டாடிய சீனர்கள், கோலாலம்பூரில் செயற்கையாக செர்ரி மரம் ஒன்றினை தயாரித்து அதில் வண்ண விளக்குகளை பொருத்தி மகிழ்ந்தனர்.
சீனப் புத்தாண்டு தினத்தன்று மழை பெய்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் பெரும் திரளான மக்கள், 'சைனா டவுண்' பகுதிக்கு வந்தனர். அங்கிருந்த புரூஸ்லீ மற்றும் ஜாக்கிச் சானின் மெழுகு சிலைகளுக்கு அருமே படம் எடுத்துக் கொண்டனர்.
ஆனால் ஷாங்ஹாயில் நிதி நிறுவனங்கள் உள்ள பகுதி மிகவும் அமைதியாக இருந்தது. அங்கு பணியாற்றும் லட்சக் கணக்கானவர்கள் புத்தாண்டையொட்டி தமது சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டதால், அந்தப் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
பெரும் ஆரவாரங்களுக்கு இடையே, ஆறு லட்சம் பேர் பயணம் செய்யும் ஒரு நெடுசாலையில் வீடு திரும்பும் ஒரு சீனக் குடும்பம்.