BBC navigation

காட்சிப்படுத்தப்பட்டுள்ள காமப் படங்கள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 2 அக்டோபர், 2013 - 12:36 ஜிஎம்டி
  • ஜப்பானிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள சுமார் 150 பாலியல் ஓவியங்கள் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இதுவரை அந்த அருங்காட்சியகத்தில் மிகவும் வெளிப்படையாகவும் தைரியமாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஓவியங்களில் இவையும் ஒன்றாக பார்க்கப்படுகின்றன. ஐரோப்பாவில் பாலியல் சம்பந்தப்பட்ட ஓவியங்கள் தீட்டப்பட்ட அதே காலப்பகுதியில் ஜப்பானில் அது எப்படி இருந்தது என்பதை ஷுங்கா எனும் இந்த ஓவியங்கள் காட்டுகின்றன.
  • ஜப்பான் பெருபாலும் வெளியுலகத்துடன் தொடர்பில் இல்லாத காலப்பகுதியில், ஜப்பானிய வாழ்க்கையின் மிகவும் நெருக்கமான தருணங்களை இந்தப் படங்கள் மூலம் பார்வையாளர்கள் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
  • இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள படங்களில் பெரும்பாலானவை 16,17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் டோக்யோவில் படைக்கப்பட்டவை. அவற்றில் பல சித்திரங்கள் உடலுறவுக் காட்சிகளை மிகவும் விரிவாக காட்டுவதாக உள்ளன.
  • "ஷுங்கா" என்றால் ஜப்பானிய மொழியில் வசந்த காலப் படங்கள் என்று பொருள். டோக்யோ நகரின் மக்கட்தொகை வேகமாக வளர்ந்து வந்த காலகட்டத்தில் இந்த ஓவியங்கள் தீட்டப்பட்டன. அப்போது ஜப்பானுக்கு மேற்குலகுடன் பெரிய தொடர்புகள் இருக்கவில்லை. இந்தப் படங்கள் தலையணை ஓவியங்கள் என்றும் அறியப்படுகின்றன.
  • பெரும்பாலான படங்கள் ஆண்-பெண் உடலுறவுக் காட்சிகளை காட்டினாலும், சில படங்களில் ஓரினச் சேர்க்கையும், கூட்டுக் கலவியும் இடம்பெற்றுள்ளன.
  • பல நெருக்கமான காட்சிகளை காட்டும் இந்த ஓவியங்கள் ஒரு தொகுப்பாகவும் விற்கப்பட்டன. அநேகமாக 12 ஓவியங்களைக் கொண்ட தொகுப்பாக அவை இருந்தன. அந்தத் தொகுப்பை வாங்குபவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட படத்தை மட்டுமன்றி பலவற்றை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.
  • இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஓவியங்கள் மிகவும் வெளிப்படைத்தன்மை கொண்டவையாக இருப்பதால், 16 வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • ஜப்பானில் இந்த "ஷுங்கா" புகைப்படத் தொகுப்பு இளம் பெண்களுக்கு திருமணத்துக்கு முன்னர் காட்டப்படும் வழக்கம் அங்கு இருந்தது. அதன் மூலம் முதலிரவில் அவர்கள் எதை எதிர்பார்க்கலாம் என்பதை குறிப்புணர்த்துவதாக அவை இருந்துள்ளன.
  • ஜப்பானில் உடலுறவு மற்றும் காம சுகம் தொடர்பான "ஷுங்கா" ஓவியக் கண்காட்சி பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி தொடங்கி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி வரை நடைபெறுகிறது.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.