BBC navigation

காலத்தால் மாறாத கார்கள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 16 செப்டம்பர், 2013 - 16:43 ஜிஎம்டி
  • இலங்கையில் ஆண்டுதோறும் நடைபெறும் பழைய காலத்துக்கு கார்களின் கண்காட்சியை ஆர்வலர்கள் செப்டம்பர் 15 ஆம் தேதி கண்டு களித்தனர். மெர்ஸிடெஸ் பென்ஸ் கண்காட்சி என்று இது அழைக்கப்பட்டது.
  • இலங்கை மெர்ஸிடஸ் பென்ஸ் கிளப் எனும் அமைப்பால் நடத்தப்படும் இந்தக் கண்காட்சியில் 400 க்கும் அதிகமான மெர்ஸிடெஸ் பென்ஸ் கார்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. இந்தக் கண்காட்சி மஹிந்த ராஜபக்ஷ தாமரை அரங்கில் இடம்பெற்றது.
  • இந்தக் கண்காட்சியில் பல காலகட்டங்களைச் சேர்ந்த மெர்ஸிடெஸ் பென்ஸ் கார்கள் ஆர்வலர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டன.
  • இந்தக் கண்காட்சியில் பல காலகட்டங்களைச் சேர்ந்த மெர்ஸிடெஸ் பென்ஸ் கார்கள் ஆர்வலர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டன.
  • இந்தக் கண்காட்சியில் இலங்கைக்கான ஜெர்மனியின் தூதர் டாக்டர். யோர்கன் மோரார்டும் பங்குபெற்றார். தமது நாட்டு தயாரிப்புகளுடன் நின்று அவர் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார்.
  • 1970 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள், இப்போது தயாரிக்கப்படும் வாகனங்களுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதன் மூலம் பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் இரண்டு காலப் பகுதியைச் சேர்ந்த வாகனங்களை பார்க்க முடிந்தது.
  • இலங்கையில் 1905 ஆம் ஆண்டே பெட்ரோலின் உதவியால் ஓடக் கூடிய வாகனங்கள் புழக்கத்துக்கு வந்தன.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.