BBC navigation

படங்களில்: மீன்களின் வர்ண ஜாலம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 8 ஜூலை, 2013 - 09:47 ஜிஎம்டி
  • கடலில் மூழ்கி மீன் கூட்டங்களைப் படமெடுப்பதை பொழுதுபோக்காகவும் தொழிலாகவும் கொண்டுள்ள ஃபிராங்கோ பன்ஃபி பல நிறங்களிலும் உள்ள மீன் கூட்டங்களைப் படம்பிடித்துள்ளார்.
  • உலகின் பல்வேறு சமுத்திரங்களிலும் மூழ்கி இவர் எடுத்தப் படங்கள் கடலுக்கடியில் எந்த அளவுக்கு வித்தியாசமான மீன்களும் பிற ஜீவராசிகளும் வாழ்கின்றன என்பதைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
  • இந்துமா சமுத்திரத்தில் மாலைத்தீவுகள் அருகில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ஐந்து வரி கொண்ட மீன்களைக் காட்டுகிறது.
  • ஒற்றைக் கொம்புடைய மீன் கூட்டமும் மாலைத்தீவு கரையருகே காணப்பட்டிருந்தது. உடலின் வண்ணங்களை மாற்றிக்கொள்ளக்கூடிய அதிசய குணம் படைத்த மீன்கள் இவை.
  • சுத்தியல் வடிவிலான தலை கொண்ட சுறா மீன் கூட்டம் இது. இவ்வகை மீன்கள் மின் அலைகளைப் பரவச் செய்து, பதுங்கியிருக்கும் இரையைக் கண்டுபிடிக்கிறதாம்.
  • வண்ணத்துப் பூச்சி போன்ற இந்த மீன்கள் வெப்ப மண்டல கடல் பரப்பில்தான் காணப்படுகின்றன. தட்டையான உடலமைப்பை இவை கொண்டுள்ளன. சுடான் அருகே எடுக்கப்பட்ட படம் இது.
  • பவுடர் புளூ டங்ஸ் (Acanthurus Leucosternon) வகை மீன் இது.
  • செங்கடலில் படம் பிடிக்கப்பட்ட இரண்டு வரி கொண்ட க்ளவுன் ஃபிஷ் (கோமாளி தோற்றமுடைய மீன்கள்) கூட்டம்.
  • கண்ணாடி மீன்களின் கூட்டம் இது.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.