BBC navigation

படங்களில்: 2013 சர்வதேச கட்டிடக்கலை விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டிடங்கள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 4 ஜூலை, 2013 - 09:32 ஜிஎம்டி
  • உலக கட்டிடக்கலை விருதுகளுக்கான போட்டியில் 29 பிரிவுகளில் 300க்கும் அதிகமான திட்டங்கள் தேர்வாகியிருந்தன. ஐம்பதுக்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த கட்டிட வடிவமைப்பு திட்டங்கள் இவை. இந்தக் கட்டிட வடிவமைப்பை சமர்ப்பித்தவர்கள் அஜெர்பெய்ஜானைச் சேர்ந்த ஸாஹா ஹதீத் கட்டிடக்கலை வல்லுநர்கள் ஆவர்.
  • இசே வென்ஃபீல்ட் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ஸ்பாவுக்கான கட்டிடம் இது. ஃபஸெண்டா பாவோ விஸ்தா என்ற பெயருடைய இக்கட்டிடம் உயரம் குறைவான வடிவமைப்பைக் கொண்டது.
  • சிங்கப்பூரில் கெய்லாங் கிழக்கு மையப்பகுதியில் நியூ சிட்டி திரையரங்கம் முன்பு நின்றிருந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள புதிய தேவாலயம் இது. வடிவமைத்தவர்கள் லாட் கட்டிடக்கலை வல்லுநர்கள் ஆவர்.
  • அமெரிக்காவில் உள்ள ஒரு அலுவலகக் கட்டிடம் இது. சீப்ஸ்பீக் பில்டிங் 12 என்ற இக்கட்டிடத்தை வடிவமைத்தது எல்லியட் அண்ட் அஸ்ஸோஸியேட்ஸ் நிறுவனத்தார். வளைந்த ஓடையை ஒட்டி எழுப்பப்பட்ட கட்டிடம் இது.
  • மால்மோவின் ஹில்லி என்ற இடத்தில் அமைந்துள்ள அங்காடித் தொகுதிகளுக்கான எம்போரியா கட்டிடத்தை வடிவமத்தவர்கள் விங்கார்த் நிறுவனத்தார்.
  • ஆஸ்திரேலியாவில் டிரைடெண்ட் கட்டிடக்கலை நிபுணர்களால் வடிவமைக்கப்பட்ட பென்சன் ரேடியாலஜி நிறுவனக் கட்டிடம் இது.
  • நெதெர்லாந்தில் உள்ள காப் ஸ்கில் - கடல் பயணம் சார் அருங்காட்சியகக் கட்டிடத்தை வடிவமைத்தவர்கள் மெகானூ நிறுவனத்தார்.
  • வியட்நாமின் கோண்ட்டும் நகரில் டக்ப்ளா ஆற்றை ஒட்டி அமைந்துள்ள விடுதிகள் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள சிற்றுண்டிக் கடை இது. சுவரில்லாத சாப்பாட்டுக் கடை இது.
  • ஷாங்காய் நகரின் ச்சாங் நிங் வட்டகையில் லவெனியு ஷாங்காய் என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி அலுவலகக் கட்டிடம் இது. லெய் அண்ட் ஆரஞ்சு நிறுவனத்தார் இதனை வடிவமைத்துள்ளனர்.
  • இயற்கையில் காணப்படும் வடிவங்களை ஒத்து வடிவமைக்கப்பட்ட நீர் வாழ் பிராணிகளுக்கான புளூ பிளனட் உயிரியல் பூங்கா இது. டென்மார்க்கில் உள்ள இந்தக் கட்டிடத்தை வடிவமைத்தவர்கள் 3XN நிறுவனத்தார்.
  • தாய்வானில் புதிதாக கட்டப்பட்டுள்ள பௌத்த மடாலயக் கட்டிடம் இது. ஜனமணி பார்வையாளர் மையம் என்ற இக்கட்டிடத்தை வடிவமைத்தது டீம்மைனஸ் நிறுவனத்தார் ஆவர்.
  • அமெரிக்காவின் சிக்காகோ நகரில் கட்டப்பட்டுள்ள ரஷ் யுனிவர்சிட்டி மெடிக்கல் செண்டர் மருத்துவமனை கட்டிடம் இது. பெர்கின்ஸ் அண்ட் வில் நிறுவனத்தார் இதனை வடிவமைத்துள்ளனர்.
  • ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் அல் பஹர் என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள 25 மாடி இரட்டை கோபுர அலுவலகக் கட்டிடம் இது. அய்டாஸ் நிறுவனத்தார் இதனை வடிவமைத்துள்ளனர்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.