'விஸ்வரூபம் விரைவில் வெளியாகும்' : இலங்கை தணிக்கைச் சபை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 28 ஜனவரி, 2013 - 15:53 ஜிஎம்டி
முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக இலங்கையிலும் தமிழகத்திலும் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடப்படவில்லை.

முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக இலங்கையிலும் தமிழகத்திலும் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடப்படவில்லை.

இலங்கையில் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று இலங்கையில் வெளியாகும் திரைப்படங்களுக்கு அனுமதி வழங்கும் தணிக்கைச் சபை தெரிவித்துள்ளது.

எந்தவொரு சமூகத்துக்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய கருத்துக்கள் அந்தப் படத்தில் இல்லை என்று தாங்கள் கருதுவதாகவும் இலங்கை தணிக்கைச் சபையின் தலைவர் காமினி சுமனசேகர பிபிசியிடம் தெரிவித்தார்.

எனினும் வெளியிடுவதற்கு முன்னதாக முஸ்லிம் தலைவர்களுக்கு திரைப்படம் போட்டுக் காண்பிக்கப்பட்டு அவர்களின் கருத்துக்கள் பெறப்படும் என்றும் அவர் கூறினார்.

'அல்கைதா பற்றித் தான் படம் பேசுகிறது'

விரைவில் விஸ்வரூபம்! : இலங்கைத் தணிக்கைச் சபை

விஸ்வரூபம் திரைப்படத்தில் எந்தவொரு சமூகத்துக்கும் எதிரான கருத்துக்கள் இல்லை என்கிறார் இலங்கைத் தணிக்கைச் சபைத் தலைவர்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் இந்த மாதம் 25-ம் திகதி வெளியான கமல் ஹாஸனின் விஸ்வரூபம் திரைப்படத்தை தமிழகம் மற்றும் இலங்கையிலுள்ள திரையரங்குகளில் வெளியிட முடியாமல் தொடர்ந்தும் தடை உள்ளது.

படத்தை வெளியிட முடியாதவாறு தமிழக அரசு இருவார கால தடைவிதித்த நிலையில், அடுத்தக் கட்டமாக இலங்கையிலும் படத்தை வெளியிடாது நிறுத்தி வைத்திருப்பதாக இலங்கை அரசாங்கமும் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது.

'இந்த நாட்டில் இந்தப் படத்தை வெளியிடுவதில் தடைகள் ஏதும் இருக்காது என்றுதான் நாங்கள் கருதுகின்றோம். ஏனென்றால் இந்தப் படத்தில் எந்தவொரு மதத்தவர்களுக்கோ இனக்குழுக்களுக்கோ அநீதி ஏற்படுத்தும் விதத்தில் ஏதும் இல்லை என்பதுதான் எமது கருத்து' என்று பிபிசியிடம் கூறினார் இலங்கை தணிக்கைச் சபை தலைவர்.

படத்தில் ஆட்களைக் கொல்லுகின்ற வன்முறைக் காட்சிகள் உள்ளதாகவும் அவற்றை நீக்கிவிட்டே படத்தை வெளியிடத் தீர்மானத்துள்ளதாகவும் இலங்கை தணிக்கைச் சபை கூறுகிறது.

இந்தியாவில் விஸ்வரூபம் படம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதனாலும் இலங்கையில் உள்ள சில முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததாலும் படத்தை வெளியிடாமல் நிறுத்தி வைத்ததாக காமினி சுமனசேகர தெரிவித்தார்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.