bbc.co.uk navigation

இலங்கை எழுத்தாளர் ஷெஹானுக்கு ஜெய்ப்பூர் இலக்கிய விருது

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 22 ஜனவரி, 2012 - 17:05 ஜிஎம்டி
ஷெஹான் கருணாதிலக்க 2008ம் ஆண்டில் சைனாமேன் நாவலுக்காக கிரேஷ்யன் பரிசிலையும் வென்றுள்ளார்

ஷெஹான் கருணாதிலக்க 2008ம் ஆண்டில் சைனாமேன் நாவலுக்காக கிரேஷ்யன் பரிசிலையும் வென்றுள்ளார்

சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக்கவின் சைனாமேன் என்ற நாவல் இம்முறை 2012ம் ஆண்டு ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் தெற்காசிய இலக்கியத்துக்கான 50 ஆயிரம் டாலர்கள் பெறுமதியான பணப்பரிசிலை வென்றுள்ளது.

கிரிக்கெட்டில் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஒருவரை, குறிப்பாக ‘சைனாமேன்’ என்று விளிக்கப்படுகின்ற வித்தியாசமான திறமை கொண்ட கிரிக்கெட் வீரரை மையப்படுத்தி ஷெஹான் கருணாதிலக்க இந்த நாவலை எழுதியிருந்தார்.

பிரதீப் சிவநாதன் மெத்தீவ் என்ற வீரரின் கிரிக்கெட் வாழ்க்கையை விளையாட்டுச் செய்தியாளர் ஒருவர் எப்படி தேடி ஆராய்கிறார் என்று கதை நகர்ந்து செல்கின்றது.

ஜெய்ப்பூர் இலக்கிய பரிசு பெற்ற ஷெஹான் கருணாதிலக்க

சைனாமேன் நாவலுக்கு 50 ஆயிரம் டாலர்கள் பணப்பரிசு பெற்ற ஷெஹான் செவ்வி

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

கடந்த 50 ஆண்டுகாலத்தில் சிவில் யுத்தத்தாலும் வேறுபல பிரச்சனைகளாலும் இலங்கையின் வளங்கள் வீணடிக்கப்பட்டு விட்டன என்ற தொனி வெளிப்பட, குறித்த கிரிக்கெட் வீரர் மற்றும் அவர் பற்றி தேடும் விளையாட்டுச் செய்தியாளர் போன்ற விசேட திறமையாளிகளையும் நாடு மறந்துவிட்டது என்ற கவலையை வெளிப்படுத்தும் விதமாக ஷெஹான் கருணாதிலக்க தனது நாவலை படைத்திருக்கிறார்.

இந்த நாவல் கொழும்பைத் தாண்டி இந்தியாவரை பயணிக்கும் என்று தான் எதிர்பார்த்திருக்கவில்லை என்று பிபிசியிடம் கூறிய எழுத்தாளர், இவ்வாறான விருதுகளால் இலங்கை எழுத்தாளர்கள் ஊக்கமடைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் கடந்த 30 ஆண்டுகால யுத்தத்தின் முடிவில் பல கதைகள் பேசப்பட வேண்டியிருப்பதாகவும் தொடர்ந்தும் இலங்கை எழுத்தாளர்கள் இவ்வாறான படைப்புகளை வழங்குவார்கள் என்றும் ஷெஹான் நம்பிக்கை தெரிவித்தார்.

இலங்கையில் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை மற்றும் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டமை, ஊடகவியலாளர்கள் நடத்தப்படுகின்ற விதம் என்பன குறித்து கவலைப்படுவதாகவும் தற்போது சிங்கப்பூரில் வசித்துவரும் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக்க தெரிவித்தார்.

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.