"கொலைவெறி"க்கு அசுர வெற்றி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 24 நவம்பர், 2011 - 19:01 ஜிஎம்டி
பாடலைப் பாடுகிறார் நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் இந்தப் பாடலை சொந்தக் குரலில் பாடி வெளிவந்துள்ள "ஒய் திஸ் கொலைவெறி டீ!" என்ற பாடல் யூடியூப் காணொளி இணைய தளத்தில் சட்டென ஹிட்டாகி காட்டுத் தீயாக பரவி பிரபலம் அடைந்துள்ளது.

தங்கிலிஷ் என்று சொல்லப்படுகின்ற தமிழ் கலந்த ஆங்கிலத்திலும் ஆங்கிலம் கலந்த தமிழிலும் இந்தப் பாடல் அமைந்துள்ளது.

ஒலிப்பதிவுக் கூடத்தில் பாடல் பதிவு நடப்பது போல இந்த வீடியோவின் காட்சி அமைந்துள்ளது.

"கொலைவெறி" வெற்றிக்கான காரணிகள் எவை?

இணையத்தில் பெரும் வெற்றிபெற்றுள்ள தமிழ்திரைப்பட பாடலின் பின்னணி காரணிகளை அராய்கிறார் தமிழ் திரைப்பட ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன்

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

"3" என்ற பெயரில் எடுக்கப்பட்டுவரும் படத்தின் புதிய இசையமைப்பாளர் அனிருத், இந்தப் படத்தின் இயக்குநரும் தனுஷின் மனைவியுமான ஐஷ்வர்யா ரஜினிகாந்த், தனுஷுக்கு ஜோடியக நடிக்கும் ஷ்ருதி கமல்ஹாசன் ஆகியோரும் தனுஷுடன் இந்த வீடியோவில் வருகிறார்கள்.

இம்மாதம் 16ஆம் தேதி யூடியூப்பில் வெளியான இந்த வீடியோவை ஒரே வாரத்தில் முப்பது லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனராம்.

இந்தியாவில் டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் எல்லாம் இந்தப் பாடலைப் பலர் தங்கள் நண்பர்கள் இடையில் பகிர்ந்துகொள்வதும், அது குறித்த விவாதமும்தான் அதிகம் பேசப்படும் விஷயமாக இருந்துவருகிறது.

இந்தப் பாடலுக்கு கிடைத்துள்ள இந்த அசுர வெற்றியைக் கண்டு இன்று முதல் எம்.டி.வி. இந்தியா தொலைக்காட்சி சானலும் இந்தப் பாடலை ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளது.

எம்.டி.வி. இந்தியா சானலில் வருகின்ற முதல் தமிழ்ப் பாடல் இதுதானாம்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.