bbc.co.uk navigation

சென்னை அருகே புராதன சிலைகள் கண்டெடுப்பு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 16 ஆகஸ்ட், 2011 - 14:54 ஜிஎம்டி

சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வேப்பஞ்சேரி என்ற கிராமத்தில் பாழடைந்த கோயில் ஒன்றில் பூமிக்கடியிலிருந்து மூன்று புராதன சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பராமரிப்பின்றிக் கிடந்த இக்கோயிலில் உழவாரப் பணிசெய்துவந்த ரீச் என்ற அரசு சாரா அமைப்பினர், இங்கு பூமிக்கடியிலிருந்து மூன்று உலோகச் சிலைகளைத் தோண்டி எடுத்திருந்தனர்.

பல்லவர், சோழர் மற்றும் நாயக்கர் காலத்து பெருமாள் சிலைகள் இவை.

சுற்றுவட்டாரத்தில் உள்ள கோயில்களின் கல்வெட்டுகளை வைத்துப் பார்க்கையில், கண்டெடுக்கப்பட்ட பல்லவர் காலத்து சிலை 1300 வருடங்கள் முந்தையதாக இருக்க வாய்ப்புள்ளது என்று ரீச் அமைப்பின் மக்கள் தொடர்பு அதிகாரியான ஜெ.சந்திரசேகரன் கூறினார்.

புராதன சிலைகள் கண்டெடுப்பு - ஆர்வலர் பேட்டி

சென்னை அருகே வேப்பஞ்சேரி கிராமத்தில் புராதன சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து ரீச் அமைப்பைச் சார்ந்த சந்திரசேகரன் தெரிவிக்கும் விபரங்கள்.

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

தவிர இந்தப் பாழடைந்த கோயில் வாஸ்துதேவபதி சௌம்யநாராயண பெருமாள் கோயில் என்று தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது இந்த சிலைகள் செய்யூர் நகர தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

உற்சவப் பெருமாள் சிலைகளாக அமைந்துள்ள இச்சிலைகளை கோயிலுக்கே திரும்பி வழங்கப்பட வேண்டும் என இந்த ஊர்வாசிகள் விரும்புவதாக சந்திரசேகரன் தெரிவித்தார்.

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.